UPDATED : அக் 08, 2026 07:11 PM
ADDED : அக் 08, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: சேது பொறியியல் கல்லுாரியில் உலக விண்வெளி வாரம், ராக்கெட் கண்காட்சி தொடக்க விழா நிறுவனர் முகமது ஜலீல் தலைமையில் நடந்தது.
நிர்வாக அதிகாரிகள் சீனி முகமது அலியார் மரைக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். விக்ரம் சாராபாய் விரிவுரை வசதி துணை இயக்குநர் சங்கரன், எஸ்.எஸ்.எல்.வி., ஏவுதள வளாக திட்ட இயக்குநர் சரவணபெருமாள் பேசினர்.
முதல்வர் சிவக்குமார், பேராசிரியர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் தென் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டு, போட்டிகளிலும் பங்கேற்றனர். இன்று, விருதுநகர் எஸ்.பி., கவுதம் கோயல், இஸ்ரோ முன்னாள் இணை இயக்குநர் வெங்கட்ராமன், திட்ட இயக்குநர் கிருத்திவாசன் பங்கேற்கின்றனர்.
