ADDED : செப் 09, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: -கள்ளந்திரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.
மாவட்ட தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் விஜயன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் நஜிமாராணி முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள், காலணிகள் வழங்கப்பட்டன. மேலும் எஸ்.பி.எம்., தொண்டு நிறுவனம் சார்பில் போர்வை, கைலிகள், உணவு வழங்கப்பட்டன. வட்டார தொழுநோய் மேற்பார்வையாளர் சீனிவாசகன் நன்றி கூறினார்.
