ADDED : நவ 03, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: -: தியாகராஜர் பொறி யியல் கல்லுாரியில் மின்னணுவியல் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறைக்கான சிறப்பு மையம், தானியங்கி கருவிகள் சிறப்பு மையம் இந்திய அரசின் மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதரவுடன் நிறுவப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா கல்லுாரி தலைவர் ஹரி தியாக ராஜன் தலைமையில் நடந்தது.
அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்து பேசினார். கல்லுாரி முதல்வர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
இந்த சிறப்பு மையத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், மற்ற கல்வி நிறுவன மாணவர்கள், தொழில்துறை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

