/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நூறு நாள் வேலை திட்டத்திற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர்: ஊரக வளர்ச்சி பணியாளர்கள் வலியுறுத்தல்
/
நூறு நாள் வேலை திட்டத்திற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர்: ஊரக வளர்ச்சி பணியாளர்கள் வலியுறுத்தல்
நூறு நாள் வேலை திட்டத்திற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர்: ஊரக வளர்ச்சி பணியாளர்கள் வலியுறுத்தல்
நூறு நாள் வேலை திட்டத்திற்கு தனி வட்டார வளர்ச்சி அலுவலர்: ஊரக வளர்ச்சி பணியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2024 07:33 AM

மதுரை : 'மகாத்மா காந்தி ஊரக நுாறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த தனி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்,' என, மதுரையில் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர்கள் வலியுறுத்தினர்.
அதன் மாநில தலைவர் சார்லஸ், பொதுச்செயலர் ரவி, ஒருங்கிணைப்பாளர்குமரேசன், பொருளாளர்பெரியசாமி ஆகியோர் அரசு முதன்மை செயலர் செந்தில்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி செயலர்களுக்கு ஒன்றிய பொது நிதியில் சம்பளம், தேர்வுநிலை, சிறப்பு நிலை சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றசெயலர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.4 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். அவர்களுக்கு சிறப்பு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள், கூட்டமைப்பு கணக்காளர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ. 10 ஆயிரம் தனிநிதியாக ஒதுக்கீடு செய்து வழங்கவேண்டும்.ஒன்றிய பணிமேற்பார்வையாளர்களுக்குமதிப்பீடு அளவு ரூ.2 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தவேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். மகளிர் திட்டத்தில் பணிபுரியும் மேலாளர்களைநிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒன்றிய பணிமேற்பார்வையாளர்களுக்கு பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உதவி இயக்குனர்களை மாற்ற வேண்டும்.
துாய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம், துாய்மை காவலர்களுக்கு மாதச்சம்பளம் ரூ.10 ஆயிரம்,ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் உதவி இயக்குனர், வட்டாரத்தில் துணை பி.டி.ஓ., நிலையில் தேர்தல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர்.