நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.
உதவிப்பேராசிரியர்கள் தேவிபூமா, திருஞானசம்பந்தம், முனியசாமி முன்னிலை வகித்தனர். மாணவி தெபோராள் வரவேற்றார். சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லுாரி பேராசிரியர் மீனாட்சி பக்தி இலக்கியமும், பகுத்தறிவு இலக்கியமும் என்ற தலைப்பில் பேசினார், மாணவி நிவேதா தொகுத்து வழங்கினார். தமிழ் உயராய்வு மையத் தலைவர் காயத்ரிதேவி, பேராசிரியர் மல்லிகா ஒருங்கிணைத்தனர். மாணவி கவிதா நன்றி கூறினார்.