ADDED : செப் 17, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : டாடா மோட்டார்ஸ் மண்டல மேலாளர் சபரி கிரிஷ், அங்கீகரிக்கப்பட்ட டீலரான காவேரி டாடா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இளங்கோ தியாகராஜன் கூறியதாவது: ஜிஎஸ்டி 2.0 வரிச்சலுகை அறிவிப்புக்கு பின் வாடிக்கையாளர் முழுவதுமாக பயன்பெறும் வகையில் கூடுதல் சலுகைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இதன் மூலம் டாடா டியாகோ மாடல் முதல் சபாரி வரையிலான கார்களுக்கு ரூ.90 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை வரி சலுகைகள் உண்டு. பழைய வாகனம் எந்த பிராண்ட் ஆக இருந்தாலும் கூடுதல் சந்தை மதிப்பீடு, நிச்சய பெயர் மாற்றம், நுாறு சதவீத ஆன் ரோடு லோன் மற்றும் குறைந்த வட்டி 7 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வசதி போன்றவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள காவேரி டாடா ஷோரூமை அணுகலாம். இவ்வாறு கூறினர்.