ADDED : ஏப் 13, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியின் 2ம் ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் துளசிராஜ், சக்தி கார்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஷியாம் பிரகாஷ் குப்தா, ஆனந்த் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆனந்த் கணேசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூத்த வழக்கறிஞர் சாமிதுரை, சமூக ஆர்வலர் மணிகண்டன் ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
ஏற்பாடுகளை டாக்டர் பாலகுருசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

