ADDED : ஜூன் 13, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ராமநாதபுரம் - ஹூப்ளி - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஹூப்ளி - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (07355) ஜூலை 26 வரை, ராமநாதபுரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் (07356) ஜூலை 27 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில்கள் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக இயக்கப்படுகிறது. இவற்றுக்கான முன்பதிவு துவங்கியது.