/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை, செங்கோட்டைக்கு இன்று சிறப்பு ரயில்
/
மதுரை, செங்கோட்டைக்கு இன்று சிறப்பு ரயில்
ADDED : அக் 17, 2025 12:04 AM

மதுரை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரை, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர் - மதுரை இன்று (அக். 17), இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 'மெமு' சிறப்பு ரயில் (06161), தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், பன்ருட்டி, கடலுார் போர்ட், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, பூதலுார், திருவெறும்பூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடை ரோடு, சோழவந்தான் வழியாக, நாளை காலை 10:15 மணிக்கு மதுரை வரும்.
அக். 18, இரவு 11:45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் மெமு சிறப்பு ரயில் (06045), தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், பன்ருட்டி, கடலுார் போர்ட், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சை, பூதலுார், திருவெறும்பூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடை ரோடு, சோழவந்தான் வழியாக மறுநாள்காலை 11:30 மணிக்கு மதுரை வரும்.
மதுரை - தாம்பரம் அக். 18மதியம் 12:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் மெமு சிறப்பு ரயில் (06162), இரவு 7:15 மணிக்கு தாம்பரம் செல்லும். அக். 21 இரவு 8:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் மெமு சிறப்பு ரயில் (06046), மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு தாம்பரம் செல்லும்.
மேற்கண்ட ரயில்கள் சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார் (ரயில் '06046' மட்டும்), செங்கல்பட்டு ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட மெமு ரயில்கள் கழிப்பறை வசதியுடன் கூடிய 12 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.
தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் இன்று (அக். 17) இரவு 7:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06013), நாளைகாலை 7:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில்அக். 20 இரவு 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06014), மறுநாள் காலை 9:45 க்கு தாம்பரம் செல்லும்.
தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக செல்லும். ஒரு 'ஏசி' சேர் கார் பெட்டி, 11 சேர் கார் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கியது.