UPDATED : அக் 23, 2026 08:02 PM
ADDED : அக் 23, 2026 08:00 PM
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் – போடி (06059) நவ.14 வரை, போடி – தாம்பரம் (06060) நவ.15 வரை, திருநெல்வேலி – தாம்பரம் (06070) நவ.12 வரை, தாம்பரம் – திருநெல்வேலி (06069) நவ.13 வரை நீட்டிக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் (06110) நவ.11 வரை, தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் (06109) நவ.12 வரை, எழும்பூர் – கன்னியாகுமரி (06045) நவ.13 வரை, கன்னியாகுமரி – எழும்பூர் (06046) நவ.15 வரை நீட்டிக்கப்படுகிறது.
எழும்பூர் – கொல்லம் (06117) நவ.12 வரை, கொல்லம் – எழும்பூர் (06118) நவ.13 வரை, சென்னை சென்ட்ரல் – கொல்லம் (06121) நவ.14 வரை, கொல்லம் – சென்னை சென்ட்ரல் (06122) நவ.15 வரை நீட்டிக்கப்படுகிறது.
இவற்றுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்குகிறது.
அதிகாரிகள் கூறுகையில் ‘ஏற்கனவே, சர்லபள்ளி – நாகர்கோவில் – சர்லபள்ளி (07535/07536) நவ.15 வரை, மைசூரு – ராமேஸ்வரம் – மைசூரு (06263/06264), சர்லபள்ளி – செங்கோட்டை – சர்லபள்ளி (07191/07192), துாத்துக்குடி – நரசாபூர் – துாத்துக்குடி (06019/06020), ஹூப்ளி – ராமேஸ்வரம் – ஹூப்ளி (07355/07356), திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி (06030/06029), மதுரை – கான்பூர் சென்ட்ரல் – மதுரை (01925/01926) ஆகிய ரயில்கள் நவ., இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவில்லா ‘மெமு’ உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் தேவைக்கேற்ப இயக்கப்படும்’ என்றனர்.
