/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
/
கோயில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
ADDED : மார் 07, 2026 06:31 AM

சோழவந்தான்: சனிப்பெயர்ச்சியையொட்டி மதுரை உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சனி பகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாவதையடுத்து, சோழவந்தான் சனீஸ்வரன் கோயிலில் பரிகார யாகம் நடந்தது. மார்ச் 5ல் விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், சனிப்ரீத்தி பரிகார ஹோமம் நடந்தது.
நேற்று மார்ச் 6 காலை 6:00 மணிக்கு சனீஸ்வர மூல மந்திர ஜெபம், தோஷ நிவர்த்தி பரிகார ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து கடம் புறப்பாடாகி 8:30 மணிக்கு மஹா அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. அர்ச்சகர் ராமசுப்ரமணியன் பூஜைகளை செய்தார். அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி, தக்கார் இளமதி ஏற்பாடு செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலுார்:: திருவாதவூர்: திருமறைநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள ஒற்றை சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்: இதில் மேலுார்:

