/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காஞ்சி பெரியவர் கோயிலில் உதயகுமார் சிறப்பு வழிபாடு
/
மதுரை காஞ்சி பெரியவர் கோயிலில் உதயகுமார் சிறப்பு வழிபாடு
மதுரை காஞ்சி பெரியவர் கோயிலில் உதயகுமார் சிறப்பு வழிபாடு
மதுரை காஞ்சி பெரியவர் கோயிலில் உதயகுமார் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 15, 2025 09:46 AM

மதுரை; அதிமுக, பாஜக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, மதுரை எஸ்.எஸ். காலனி காஞ்சி பெரியவர் கோவிலில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பாஜகவுடன் சேர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். இந்த கூட்டணி அமைந்தால் வலுவான இடங்களில் வெற்றி பெறலாம் என்பதையும் அவர் தொடர்ச்சியாக சொல்லி வந்தார். இந்த நிலையில் அமித்ஷா தமிழ்நாடு வந்தபோது, கூட்டணி உறுதி ஆனது.
தமிழ் புத்தாண்டு தினமான நேற்று இரவில், சட்டசபை கூட்டத்திற்கு கிளம்பும் முன்பாக, மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோயிலுக்கு சென்றார்.
அங்கு , காஞ்சிப் பெரியவருக்கு தானே தீபாராதனை செய்து, பூஜைகள் செய்து வணங்கினார். பயபக்தியோடு அங்கு வேண்டிக் கொண்டார்.
அதிமுக கூட்டணி வெற்றிபெற
வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற வழிபட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, அவரை வரவேற்று, பிரசாதங்கள் வழங்கினார்.