ADDED : டிச 03, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பாரதியாரின் பிறந்தநாள் விழா, தானம் மக்கள் கல்வி நிலைய ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு, ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு பாரதியார் கவிதையில் புதுமை கால காட்சி என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, கல்லுாரி மாணவர்களுக்கு பாரதி கவிதையில் ஊக்கமும் உற்சாகமும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்படும். இவற்றை ஒளி, ஒலி பதிவாக dpa@dhan.org மின்னஞ்சலுக்கு டிச. 6க்குள் அனுப்ப வேண்டும். டிச. 10 ல் அலைபேசி மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும். விவரங்களுக்கு 80566 57333.