நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி நீரேத்தான் மந்தையில் பழைய மாணவர் கழகம் சார்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டி, பென்னிகுவிக் பிறந்தநாள் விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ஜெயகாந்தன் வரவேற்றார். பென்னிகுவிக் படத்திற்கு உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் ஜெயரட்சகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னாள் தீயணைப்பு வீரர் மனோகரன், ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் வெங்கடேஷ், பழைய மாணவர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

