ADDED : பிப் 06, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி; வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் நேரு யுவகேந்திரா மற்றும் முள்ளிப்பள்ளம் ஜே.பி., மகளிர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் துவக்கி வைத்தார். அன்னை அகாடமி சேர்மன் ஆண்டி முன்னிலை வகித்தார்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை உள்ளிட்ட பரிசுகளை அரசு சட்டக் கல்லுாரி உதவி பேராசிரியர் முரளிதரன், வழக்கறிஞர்கள் முத்துமணி, தங்கப்பாண்டி வழங்கினர்.
மாணவ, மாணவியர்களுக்கு ஓட்டம், வாலிபால், சிலம்பம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் விளையாட்டு போட்டிகளின் நடுவராக இருந்தார். ரோஜா மகளிர் மன்ற நிர்வாகி சந்தியா நன்றி கூறினார்.