ADDED : ஜூலை 16, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் குழுமத் தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விளையாட்டு போட்டி நடந்தது. 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர் ரவி பச்சமுத்து, கல்லுாரி தலைவர் பத்மபிரியா, தாளாளர் ஹரிணி வாழ்த்தினர். பூஜையை முதல்வர் துரைராஜ் துவக்கி வைத்தார்.
எஸ்.ஆர்.எம்., ரீகிரியேஷனல் கிளப் சார்பில் பேராசிரியர்களுக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை துணை முதல்வர் சம்பத், மனோகரன் செய்திருந்தனர்.