
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாடக்குளம் ஸ்ரீவஷிஸ்டா பள்ளியின் 23ம் ஆண்டு விளையாட்டு விழா தாளாளர் செல்வம் தலைமையில் நடந்தது.
தலைமையாசிரியை காஞ்சனா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் சென்னை டி.சி.எஸ்., சீனியர் பொறியாளர் பாலாஜி துவக்கி வைத்து பேசினார். சிறப்பு விருந்தினர் முருகன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உதவி தலைமையாசிரியை மதனிகா, கமிட்டி நிர்வாகி சுக்ரிதி, ஆசிரியை கல்பனா தேவி, கராத்தே மாஸ்டர் பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

