ADDED : அக் 07, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்,: கள்ளிக்குடி காட்டுப்பகுதியில் இருந்து நேற்று மாலை ஊருக்குள் வந்த மூன்று மாத ஆண் புள்ளிமான் குட்டியை நாய்கள் துரத்தி கடித்ததில் காயமடைந்தது.
நாய்களிடமிருந்து தப்பிய மான் குட்டி அந்தப் பகுதியின் முன்னாள் ராணுவ வீரர் முத்துராமனுக்கு சொந்தமான தோட்டத்தில் பதுங்கியது. அவர் மான் குட்டியை மீட்டு சாத்துார் வனத்துறைக்கு தெரிவித்தார். வனத்துறையினர் வரும் வரை மான் குட்டியை பால் கேனில் வைத்து பாதுகாத்து, வனத்துறையிடம் ஒப்படைத்தார். மானுக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர் அதனை தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

