நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்த செல்வராஜ், கல்லுாத்தில் விவசாயம் செய்து வருகிறார். அத்தோட்டத்தில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் உள்ளது. அதில் புள்ளிமான் தவறி விழுந்து வெளியேற முடியாமல் தத்தளித்ததைப் பார்த்தார்.
உசிலம்பட்டி வனத்துறை, தீயணைப்பு அதிகாரிகள் கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை கயிறு கட்டி மீட்டனர். ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமானை விடுவித்தவுடன், வனப்பகுதிக்குள் ஓடியது.

