ADDED : ஜூன் 09, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் வசந்த உற்ஸவம் நேற்று நிறைவடைந்தது.
கோயிலில் மே 31ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய இத்திருவிழாவில் தினம் இரவு சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி வசந்த உற்ஸவம் நடந்தது.
நிறைவுநாளான நேற்று வசந்த உற்ஸவம் முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஜூன் 9) விசாக பால்குட திருவிழா நடக்கிறது.