ADDED : ஜூலை 16, 2025 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் தேசிய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம்( எஸ்.ஆர்.இ.எஸ்.,) மதுரை கோட்டம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் சென்ன கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைப்பொதுச்செயலாளர் ராஜாராம், பொருளாளர் பிரபு, செயல் தலைவர் நாராயண பிரசாத் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாகேந்திரன் கோரிக்கைகளை விளக்கினார்.
கேட் கீப்பர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்க வேண்டும். மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து கேட்டுகளும் 'இன்டர்லாக்' செய்யப்பட வேண்டும்.
பணிப்பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. துணைச்செயலாளர்கள் எட்வின் பிரபு, சஜன், கிளைச் செயலாளர்கள் முருகன், செல்வம், பிரடரிக், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.