ADDED : ஜன 30, 2025 05:38 AM

மதுரை: ரயில்வே ஓடும் தொழிலாளர்களுக்கு வரிவிலக்கு,காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரிமதுரை கோட்ட எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில்ஸ்டேஷன் மேற்கு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார்.
எஸ்.ஆர்.எம்.யூ., கோட்ட செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார் பேசியதாவது:
மதுரை கோட்டத்தில் ஓடும் தொழிலாளர் பிரிவில் 151 காலியிடங்கள் உள்ளன. தற்போதுள்ள தொழிலாளர்களை வைத்து அனைத்து ரயில்களையும் இயக்குவதால் அவர்களுக்கு விடுப்பு, ஓய்வு கிடைக்காமல் மன அழுத்தம் ஏற்படுகிறது. 8வது ஊதியக் குழுஅமல்படுத்தபடவுள்ளநிலையில் கி.மீ., அலவன்ைஸ உயர்த்தாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
6வது ஊதிய குழுவில் கி.மீ., அலவன்ஸிற்கு20 சதவீத வரி விலக்கு அளித்தனர். 7வது ஊதிய குழுவில் வரிச் சலுகை வழங்கவில்லை.
மற்ற பிரிவு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போலஓடும் தொழிலாளர்களுக்கும் வருமான வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றனர்.
ஓடும் தொழிலாளர்கள் பிரிவு உதவி கோட்ட செயலாளர்கள் முத்துக்குமார், கருப்பையா, நித்யராஜ், மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

