/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்
/
மதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 27, 2025 01:02 AM

மதுரை; ஓய்வுபெற்ற ஓடும் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் ரயில்வே முடிவினை எதிர்த்து மதுரை கோட்ட எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரயில்வே கோட்ட அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓடும் தொழிலாளர்கள் பிரிவு செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.
கோட்ட செயலாளர் ரபீக், உதவிசெயலாளர் ராம்குமார் பேசியதாவது: ரயில்வே காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய ஆட்கள் எடுக்காமல், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.அரசு 2018 ல் இதேபோல ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியாற்ற முடிவுசெய்தபோது எங்கள் சங்கம் போராடி தடுத்தது. சரியான திட்டமிடுதலுடன் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். முன்னாள் தலைவர் தாமரைச் செல்வன், உதவி கோட்ட செயலாளர்கள் நித்யராஜ், அருண், லெனின், சதீஸ், கிறிஸ்டோபர், ஜெபகுமார் பங்கேற்றனர்.