/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்கள் நலத்திட்டங்களால் நன்மதிப்பு பெறும் ஸ்டாலின் தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.பி., பெருமிதம்

ADDED : ஆக 11, 2025 04:53 AM
அவனியாபுரம்: ''நலத்திட்டங்களை நிறைவேற்றுவதால் முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி வருகிறார்' என தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.பி., தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
பீஹார் வாக்காளர்கள் முறைகேடு குறித்து இன்று டில்லியில் லோக்சபாவில் இருந்து தேர்தல் ஆணையம் வரை அனைத்து எதிர்க்கட்சி எம்.பி., க்களும் நடைபயணமாக சென்று மனு அளிக்க உள்ளோம்.
பீஹாரில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து லோக்சபாவில் விவாதங்கள் நடத்த வேண்டும் என கேட்க உள்ளோம். இதுவரைக்கும் மத்திய அரசு இது குறித்து காது கொடுத்து கேட்கவில்லை. இதற்கு மேல் லோக்சபா நடக்குமா என்பது தெரியவில்லை. நியாயம், நீதியை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இன்று தி.மு.க., உள்ளது என்பதை நிரூபித்து உள்ளோம்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி., க்களும் பேசி உள்ளோம். நிரந்தரமாக தீர்வு காண வேண்டுமென்றால் இந்திய அளவில் அதிகாரிகளை நியமித்து கண்காணித்து மீனவர் கைது நடவடிக்கையை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நிபந்தனை கொடுத்துள்ளோம்.
தி.மு.க., அரசு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் நல்ல பெயர் பெற்றுள்ளார். 2026 தேர்தலில் மீண்டும் தி.மு.க., கூட்டணி ஜெயிக்கும். ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வராக வருவார். மத்திய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்க தயாராக இல்லை. இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தில் நிலைக்கும். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றார்.