ADDED : மார் 20, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் சாகுபடி செய்த நெல்அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இத்தாலுகாவில் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுார் பகுதிகள் இக்கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதிகளில் விவசாயிகள் கோ 5, 1, போன்ற குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்தனர்.
தற்போது விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். அரசு நெல் கொள்முதல் மையங்கள் திறக்காததால் தற்போது தனியாரிடம் நெல்லை விற்று வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 40 முதல் 45 மூடை வரை விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

