ADDED : டிச 13, 2024 04:47 AM

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் 40 வது மாநில அளவிலான பாரதியார் தினவிழா பூப்பந்து குழு விளையாட்டு போட்டி திருச்சியில் நடந்தது.
19 வயது மகளிர் பிரிவில் மதுரை ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் முதல் சுற்றில் 35 - 22, 35 - 23 என்ற புள்ளிகளில் ஈரோடு அணியையும், 2வது சுற்றில் கரூர் அணியினரை 35 - 11, 35 - 10 என்ற புள்ளிகளிலும் வீழ்த்தினர். காலிறுதியில் செங்கல்பட்டு அணியை 35 - 9, 35 - 25 புள்ளிகளிலும் அரையிறுதியில் சேலம் அணியை 35 - 23, 35 - 18 புள்ளிகளிலும் வென்றனர்.
இறுதிப் போட்டியில் விழுப்புரம் அணியை 35 - 21, 35 - 21 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கப்பதக்கம், கோப்பையை தொடர்ந்து பத்தாவது முறையாக தக்கவைத்தனர். சி.எஸ்.ஐ., பிஷப் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், மேரி ஜெய்சிங், தாளாளர் ஸ்டான்லி ஜெயராஜ், தலைமையாசிரியை மேரி, உடற்கல்வி இயக்குநர் பெர்சீஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ்கண்ணன், ஷர்மிளா பாராட்டினர்.

