ADDED : டிச 13, 2024 04:50 AM

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சியில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான பாரதியார் தின பூப்பந்து குழு விளையாட்டு போட்டி நடந்தது.
இதில் மதுரை திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் சுற்றில் நாகப்பட்டினம் அணியை 35 - 18, 35 - 20 புள்ளிகளில் வென்றனர். 2வது சுற்றில் ராணிப்பேட்டை அணியை 35 - 28, 35 - 18 புள்ளிகளிலும், காலிறுதியில் கரூர் அணியை 35 - 30, 35 - 26 புள்ளிகளிலும் வீழ்த்தினர். அரையிறுதியில் சேலம் அணியை 35 - 24, 35 - 20 புள்ளியில் வீழ்த்தினர். இறுதிப்போட்டியில் விருதுநகர் அணி வென்றது. திரு.வி.க., பள்ளி மாணவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராமகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஈஸ்வரி, தலைமையாசிரியர் அன்புச்செல்வன், உதவி தலைமையாசிரியர்கள் சந்தானலட்சுமி, ஜோசப், உடற்கல்வி இயக்குநர் கபிலன், உடற்கல்வி ஆசிரியர் நரேஷ் பாராட்டினர்.

