ADDED : பிப் 15, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தர்மபுரியில் நடந்த மாநில குத்துச்சண்டை போட்டியில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் பள்ளி 8 ம் வகுப்பு மாணவி அக்ஷயாஸ்ரீ, பேபி தர்ஷினி, பிளஸ் 2 மாணவி சாந்தினி வெண்கல பதக்கங்களை வென்றனர்.
பெரம்பலுாரில் நடந்த மாநில வாள் சண்டை போட்டியில் 6ம் வகுப்பு மாணவி சாருமதி, பிளஸ் 2 மாணவி ரித்திகா ஸ்ரீ வெண்கல பதக்கங்களை வென்றனர்.
பள்ளிக்குழுத் தலைவர் செல்லத்துரை, செயலாளர் கிருஷ்ணன், தலைமையாசிரியை இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியை உமா பாராட்டினர்.

