ADDED : ஜன 21, 2025 06:11 AM
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உடற்கல்வித்துறை சார்பில் கல்லுாரி முன்னாள் செயலாளர் தியாகராஜன் செட்டியார் நினைவு மாநில சதுரங்கப்போட்டிகள் ஜன.29ல் கல்லுாரியில் நடக்கிறது.
12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்பவர்கள் 29.1.2013க்கு பின்பு பிறந்தவர்களாகவும், 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்பவர்கள் 20.1.2010க்கு பின்பு பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று மாணவியருக்கு சிறப்பு பரிசுகள், ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசும், அதிக மாணவர்கள் பங்கேற்கும் பள்ளிக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும்.
பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் உண்டு. பங்கேற்பவர்கள் சதுரங்க போர்டு கொண்டு வர வேண்டும். வயது சான்றிதழ், பள்ளி அடையாள அட்டையுடன்போட்டிக்கு வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் 90803 61863ல் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் யுவராஜிடம் முன்பதிவு செய்யலாம் என கல்லுாரிமுதல்வர் சந்திரன் தெரிவித்தார்.

