தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில செஸ் போட்டி

 மாநில செஸ் போட்டி

 மாநில செஸ் போட்டி


ADDED : டிச 17, 2025 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திருப்பரங்குன்றம் மாணிக்கம் ராமசாமி கல்லுாரி சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, திருப்பூர், கோவையைச் சேர்ந்த 250 வீரர்கள் பங்கேற்றனர். 10 வயது பிரிவு, 13, 16, 18 வயது பிரிவுகளின் கீழ் தரவரிசை அடிப்படையில் போட்டி நடந்தது.

ஆடவர் 10 வயது பிரிவில் பிரணவ் கார்த்திக்குமார், 13 வயது பிரிவில் ஜாஸ்பர் சாம்ராஜ், 16 வயது பிரிவில் திருச்சி சர்வேஸ்வரன், 18 வயது பிரிவில் நித்திஷ் வெற்றி பெற்றனர்.

மகளிர் 10 வயது பிரிவில் ஹர்ஷிகா, 13 வயது பிரிவில் தமிழினி, 16 வயது பிரிவில் பவித்ராணி, 18 வயது பிரிவில் ஸ்ரீஹசிதா வெற்றி பெற்றனர். முதல்வர் ரமேஷ்குமார் பரிசு வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் கவுதம், துணை உடற்கல்வி இயக்குநர் பிரியா, மதுரை மாவட்ட செஸ் கழக செயலாளர் உமா மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us