ADDED : நவ 01, 2024 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தன.
அவற்றில்குயவர்பாளையம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவி யாஸ்மின், 19 வயதுக்குட்பட்ட நீளம் தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்றார். 100, 200 மீ., ஓட்டப் பந்தயங்களில் 2ம் இடம் பெற்றார். இம்மாணவி உள்ளிட்ட குழு பங்கேற்ற 400 மீ., தொடர் ஓட்டத்திலும் இப்பள்ளி முதலிடம் பெற்றது.
மேற்கண்ட 4 பிரிவிலும் மாநில அளவில் ஈரோட்டில் நடைபெறும்போட்டிகளில் பங்கேற்க உள்ளமாணவி யாஸ்மினைதலைமை ஆசிரியை ஜெயராணி, உடற்கல்வி ஆசிரியர்கள் அருள், ஷர்மிளா பாராட்டினர்.

