ADDED : டிச 29, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட ஆசிரியர்கள் கிரிக்கெட் கிளப் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் கிடாரிப்பட்டி லதாமாதவன் கல்லுாரியில் துவங்கியது.
இதில் மதுரை உட்பட 16 க்கும் மேற்பட்ட மாவட்ட அணிகள் பங்கேற்றன. போட்டி அமைப்பாளர்களான ஆசிரியர்கள் பொன்ராஜ், ஜோசப்ரத்தினசாமி, ராஜேஷ்குமார் மற்றும் பால்பாண்டி, காமராஜ், மணிகண்டன், அருண் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். போட்டிகளை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணித் தலைவர் சச்சின் சிவா துவக்கி வைத்தார். லதா மாதவன் கல்விக்குழும நிறுவனர் மாதவன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் சகாயலுார்து உறுதிமொழி வாசித்தார். ஆசிரியர் காமராஜ் நன்றி கூறினார். ஆசிரியர் பொன்ராஜ் தொகுத்து வழங்கினார்.

