ADDED : அக் 05, 2025 03:40 AM
மதுரை : மதுரை சேது கிரிக்கெட் பவுண்டேஷன் சார்பில் மதுரைக் கல்லுாரியில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான மேகலா நினைவு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சென்னை பாய்ஸ் ஆப் பியூ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
போட்டி முடிவுகள் எம்.ஏ.பி., அணி, சேது கிரிக்கெட் அணிகள் மோதியதில் டாஸ் வென்ற எம்.ஏ.பி., அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய சேது அணி 43.4 ஓவர்களில் 201 ரன் எடுத்தது. புவனேஸ்வரன் 67, அஸ்வந்த் மாரிமுத்து 32 ரன் எடுத்தனர். கோகுல்நாத், ஈஸ்வர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்து ஆடிய எம்.ஏ.பி., அணி 32.5 ஓவர்களில் 107 ரன்னுக்கு சுருண்டது. பிரணவ் 4 விக்கெட் வீழ்த்தினார். 94 ரன் வித்தியாசத்தில் சேது அணி வென்றது.
அடுத்த போட்டியில் பாய்ஸ் ஆப் பியூ அணி 50 ஓவர்களில் 280 ரன் எடுத்தது. சஞ்சய் செல்வம் 83 (நாட்அவுட்), லோகேஷ் 64 ரன் எடுத்தனர். அடுத்து ஆடிய ஏசியாட்டிக் அணி 48.3 ஓவர்களில் 247 ரன் எடுத்தது. சித்தார்த் பாலகிருஷ்ணன் 72, ஹஸ்வந்த் முருகன் 53 ரன் எடுத்தனர். பலராம் 3 விக்கெட் வீழ்த்தினார். பாய்ஸ் அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சேது அணி 45 ஓவர்களில் 114 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய ஏசியாட்டிக் அணி 31 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாய்ஸ் ஆப் பியூ அணி 37 ஓவர்களில் 223 ரன் எடுத்தது. ஜாக் 91 ரன் எடுத்தார். ஈஸ்வர் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய எம்.ஏ.பி., அணி 33.2 ஓவர்களில் 134 ரன் எடுத்தது. தனன் ரைஸ் 42 ரன் எடுத்தார். விஸ்வா 4 விக்கெட் வீழ்த்தினார். பாய்ஸ் அணி 89 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நல்லமணி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஏசியாட்டிக் அணி 30 ஓவர்களில் 139 ரன் எடுத்தது. சித்தார்த் பாலகிருஷ்ணன், ஹஸ்வந்த் முருகன் தலா 35 ரன் எடுத்தனர். நிகில் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய பாய்ஸ் அணி 25.5 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாக் 60, நிகில் 28 ரன் எடுத்தனர். உதிஷ் 3 விக்கெட் வீழ்த்தினார். சென்னை பாய்ஸ் ஆப் பியூ அணி சாம்பியன் பட்டம் வென்றது.