UPDATED : நவ 19, 2026 07:34 PM
ADDED : நவ 19, 2026 07:34 PM

அ நிறம் | அளவு
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோவையில் நடந்த மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் மதுரை மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.
செயின்ட் பிரிட்டோ பள்ளி ஹர்ஷினி தமிழ்ச்செல்வி தங்கப்பதக்கம், ரோட்டரி பள்ளி ஜெய் விவேகன் வெள்ளிப்பதக்கம் வென்றனர். சீபா தங்கப்பதக்கம், தியாஸ் கார்த்திக் வெண்கலம் வென்றனர். ஏ.பி.டி. துரைராஜ் பள்ளி கார்த்திக், சவுராஷ்டிரா பள்ளி விஷ்ணு பிரியா, மகாத்மா பள்ளி அக் ஷரா, வர்ஷிகா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க செயலாளர் கருணாகரன், பயிற்சியாளர் ரோகித் பாராட்டினர்.
