தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இளையோர் பளுதுாக்கும் போட்டி

இளையோர் பளுதுாக்கும் போட்டி

இளையோர் பளுதுாக்கும் போட்டி


UPDATED : நவ 19, 2026 07:40 PM

ADDED : நவ 19, 2026 07:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 07:40 PM ADDED : நவ 19, 2026 07:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் 21வது மிக இளையோர் பளு துாக்கும் போட்டி, முதலாவது சிறார் பளு துாக்கும் போட்டிகள் நீதிராஜன் பாரதி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. மதுரை மாவட்ட பளு துாக்கும் சங்க புரவலர் நீதிசேகர் தொடங்கி வைத்தார். சந்திரசேகரன், கிருஷ்ணமாச்சாரி, பூஜா, தனசேகரன், சிவநாத் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

10 உடற்பயிற்சிப் பள்ளிகளில் இருந்து 43 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 12 வயது 40கிலோ பிரிவில் ஆஞ்சநேயர் ஜிம் மணிகண்டன் முதல் பரிசு பெற்றார். 14 வயது 45 கிலோ பிரிவில் ஸ்டார் அகாடமி முகமது பர்கான் மொத்தம் 114 கிலோ எடை துாக்கி சிறந்த பளு துாக்கும் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். 50 கிலோ பிரிவில் வர்தீஸ், 55கிலோ பிரிவில் ரஞ்சித் ராகவ், 60 கிலோ பிரிவில் யுவராஜ், 65 கிலோ பிரிவில் யோகேஸ்வரன், 70 கிலோ மேற்பட்ட பிரிவில் கார்த்திகேயன் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

12 வயது சிறுமியர் பிரிவில் தன்யாஸிரி, அஸ்மிதாஸிரி முதல் பரிசு பெற்றனர். 14 வயது 45 கிலோ பிரிவில் எத்திஷ்கா, 61 கிலோ மேற்பட்ட பிரிவில் அனு பாரதி முதல் பரிசு பெற்றனர். 17 வயது பிரிவில் ஸ்டார் அகாடமி சவுபர்னிகா 135 கிலோ எடை துாக்கி சிறந்த பளு துாக்கும் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 49 கிலோ பிரிவில் சாதனா, 61 கிலோ பிரிவில் அனுஷ் ப்ரீத்தி முதல் பரிசு பெற்றனர்.

17 வயது 55 கிலோ பிரிவில் நிலையூர் சவுராஷ்டிரா ஜிம் அபினேஷ்குமார் 160 கிலோ எடை துாக்கி சிறந்த பளு துாக்கும் வீரராகத் தேர்வானார். 60 கிலோ பிரிவில் கவி மணிகண்டன், 65 கிலோ பிரிவில் சபரி, 75 கிலோ பிரிவில் ஜீவா, 85 கிலோ பிரிவில் பிரனேஷ் பாண்டி, 95 கிலோ பிரிவில் முருகன், 95 கிலோ மேற்பட்ட பிரிவில் சந்துரு ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

வீரர்களுக்கு சர்வதேச டென்னிஸ் பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் பரிசு வழங்கினார்.

தலைவர் நீதி வினித், பொருளாளர் விநாயகமூர்த்தி, செயலாளர் ஆனந்தகுமார் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மார்க்ஸ் லெனின், சரண்ராஜ், ராஜேஷ்குமார், மோகன்ராம் செய்தனர்.

போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் டிச. 3 முதல் 5 வரை சேலத்தில் நடக்க உள்ள மாநிலப் பளு துாக்கும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us