/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்களுக்கு மாநில கராத்தே போட்டி
/
மாணவர்களுக்கு மாநில கராத்தே போட்டி
ADDED : பிப் 08, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளி சார்பில் மாநில கராத்தே போட்டிகள் சவுராஷ்டிரா கல்லுாரியில் நடந்தது.
கட்டா பிரிவை பொறியாளர் தனசேகரன் துவக்கி வைத்தார். சண்டை பிரிவை கல்லுாரி செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். 350க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் சீனிவாசன், பிருந்தாவன கோ சாலை நிறுவனர் அஜய்கார்த்திக், பொறியாளர் மணிகண்டன், ஸ்ரீபூ கலாசார மைய நிறுவனர் நிஷாராணி, செயலாளர் ராமகிருஷ்ணன் பரிசு வழங்கினர்.
கராத்தே பள்ளியின் தலைமை பயிற்சியாளர்ராஜா, முத்துகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்துஇருந்தனர். தலைமை நடுவராக வைரமணி செயல்பட்டார்.

