
மதுரை: தமிழ்நாடு பாரம்பரிய விளையாட்டு கராத்தே சங்கம் சார்பில் மாநில அளவிலான 3வது கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஈரோட்டில்நடந்தது. மாவட்ட செயலாளர் சக்திவேல் ஏற்பாடுகளை செய்துஇருந்தார். இதில் மதுரை ஜி தொக்குகாய் கராத்தே பள்ளி வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றனர்.
சப் ஜூனியர் கட்டா 10 வயது பிரிவில் நந்தித்தா வெள்ளி, 13 வயது பிரிவில் ஜீவிதா தங்கம் வென்றனர். சப் ஜூனியர் சண்டை 7 வயது பிரிவில் சித்தார்த் தங்கம், ஜெயமித்ரா வெண்கலம் வென்றனர். 8 வயது பிரிவில் யாழிவேந்தன் வெண்கலம், 9 வயது பிரிவில் அருள் டார்வின் தங்கம், எப்ரான் வெண்கலம் வென்றனர்.
10 வயது பிரிவில் நந்தித்தா தங்கம், சஞ்சீவன் வெள்ளி, லக் ஷிதா, பேரழகன் வெண்கலம், 11 வயது பிரிவில்ஹர்ஷன், திவ்ய தர்ஷன் வெண்கலம் வென்றனர். 13 வயது பிரிவில் சாய் சரண் தங்கம், முபித் முகமத், ராம் யுகேஷ், ஜீவிதா வெண்கலம் வென்றனர். கேடட் பிரிவில் சாதனா ஸ்ரீ, ஜெய்தா, விக்னேஸ்வரன் வெண்கலம், சீனியர் பிரிவில் மதன் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றனர்.
வெற்றி பெற்றவர்கள் தேசிய கராத்தே போட்டிக்கு தேர்வாகினர். மாநில கராத்தே சங்கத்தலைவர் செழியன், பொதுச்செயலாளர் மோகன், தலைமை தொழில்நுட்ப இயக்குநர் முத்துராஜூ, நடுவர்குழுத் தலைவர் சரவணன், பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.