தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநில கராத்தே: மதுரை மாணவர்கள் சாம்பியன்

மாநில கராத்தே: மதுரை மாணவர்கள் சாம்பியன்

மாநில கராத்தே: மதுரை மாணவர்கள் சாம்பியன்


ADDED : பிப் 05, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தென்இந்திய ஓபன் கராத்தே போட்டி ஈரோடு வெள்ளாளர் பள்ளில் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் மதுரை ஜி தொக்குக்காய் பள்ளி மாணவர்கள் மாவட்ட செயலாளர் கவுரி சங்கர் தலைமையில் பங்கேற்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை வென்றனர்.

பெண்கள் கட்டா பிரிவில் முதல்பரிசு வென்ற மாணவிகள் சுந்தரராஜா உயர்நிலை பள்ளி மாணவி நந்திதா, டி.வி.எஸ். லட்சுமி பள்ளி மாணவி லக் ஷிதா, கேந்திரிய வித்யாலயா மாணவி பவானி, கட்டா பிரிவில் 2ம் பரிசு உலகனேரி அரசு பள்ளி ஜீவிதா, சண்டை பிரிவில் 3ம் பரிசு பெற்றவர்கள், மாத்துார் அரசு பள்ளி சாதனா ஸ்ரீ, ஆண்கள் கட்டா பிரிவில் வல்லபா பள்ளி மாணவர்கள் தக் ஷின், எப்ரான் முதல் பரிசும், ஹரிச்சரண் 2ம் பரிசு, சித்தார்த் 3ம் பரிசு, சண்டை பிரிவில் ஸ்ரீ ஷ்ரவன் மூன்றாம் பரிசு, மஹாத்மா பள்ளி மாணவர்கள் அபிநவ், சிதம்பரம் கட்டா பிரிவில் முதல் பரிசு,சூர்யா, யுவன் கருணேஷ் சண்டை பிரிவில் 3ம் பரிசு, பாண்டுக்குடி பள்ளி மாணவர் கணேஷ்ராம் கட்டா பிரிவில் 2ம் பரிசு மற்றும் சண்டை பிரிவில் மூன்றாம் பரிசு, டி.வி.எஸ். லட்சுமி பள்ளி மாணவர் யாழ்வேந்தன் மூன்றாம் பரிசு, செவன்த்டே பள்ளி மாணவர் விக்னேஸ்வரன் சண்டை பிரிவில் 3ம் பரிசு, கேந்திரியா வித்யாலயா பள்ளி மாணவர் யாத்ரா கட்டா பிரிவில் இரண்டாம் பரிசு, மாத்துார் அரசு பள்ளி மாணவர் விஷ்ணு சண்டை பிரிவில் 3ம் பரிசும் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை ஜி தொக்குக்காய் அகில இந்திய தலைவர் கராத்தே தியாகராஜன், பொது செயலாளர் சென்சாய் முத்துராஜு, மற்றும் பயிற்சியாளர்கள் வினீத், சந்தோஷ் குமார் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us