/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு கொள்கை முடிவு அவசியம் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 28, 2025 05:12 AM

மதுரை : அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு கொள்கை முடிவெடுத்து, இந்தாண்டாவது தலைமையாசிரியர் இல்லாத பள்ளி உள்ளது என்ற நிலை ஏற்பட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசியர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசன் வலியுறுத்தினார்.
மதுரையில் இச்சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது. பொருளாளர் திவ்யநாதன் வரவேற்றார். முன்னாள் மாநிலத் தலைவர் சாமி சத்தியமூர்த்தி, பொதுச் செயலாளர் மாரிமுத்து, அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
அன்பரசன் பேசியதாவது: தமிழகத்தில் 600 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
தொடக்க பள்ளிகளிலும் இதேநிலை தான். பி.ஜி., ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க கூடாது, டி.இ.டி., தேர்ச்சி தொடர்பாக நீதிமன்ற வழக்குகள்தான் இதற்கு காரணம். இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை. இவ்விஷயத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்து தீர்வுகாண வேண்டும். இந்தாண்டில் தலைமையாசிரியர் இல்லாத அரசு பள்ளி இல்லை என்ற நிலை வரவேண்டும் என்றார்.
டி.இ.ஓ.,க்கள் அசோக்குமார், பாஸ்கரன், நாகேந்திரன், சங்க மாநில துணைத் தலைவர் முனியாண்டி, ஓய்வு சி.இ.ஓ.,க்கள் முத்தையா, இந்திராணி பங்கேற்றனர்.
மகளிரணி நிர்வாகி லிங்கேஸ்வரி நன்றி கூறினார்.