ADDED : அக் 31, 2025 01:56 AM

மதுரை:  சாய் பாரம்பரிய கலை, பறவை கற்பகம் பள்ளி சார்பில் மதுரையில் நடந்த மாநில சிலம்பப் போட்டியில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
5 முதல் 13 வயதுக்குட்பட்டோர் ஒற்றைக்கம்பு பிரிவில்  சாய் ஸ்ரீ லக் ஷிதா, பிருந்தா,  மதுஸ்ரீ, கீர்த்தனா, நிதிஷ்குமார், சாய் சஷ்டிதா ஆகியோர் முதல் பரிசும், பிரகலாதன், பானுப்ரியா, ஜெயதர்ஷினி 2ம் பரிசும் பெற்றனர்.
இரட்டைக் கம்பு பிரிவில் ஜெயலட்சுமி, யுவஸ்ரீ  முதல் பரிசு, கீர்த்தனா, மகேஸ்வரி, விஸ்வநாத், மகாலட்சுமி 2ம் பரிசு, கீர்த்தனா 3ம் பரிசு பெற்றனர்.
அகாடமி தலைவர் ராஜா, செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் தினேஷ்குமார், சாய் தலைவர் சாய் சுதாகர், பயிற்சியாளர்கள் அஜய் கிருஷ்ணா, ஆசைதமிழ், அக் ஷய லட்சுமி பாராட்டினர்.
வைகை மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் நடந்த போட்டிகள்: வைகை மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் மதுரை பாத்திமா கல்லுாரியில் மாநில சிலம்பப் போட்டி நடந்தது. 650 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் அப்பன்திருப்பதி கஸ்துாரிபாய் காந்தி பள்ளி மாணவர்கள் 5 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கல பதக்கங்களை வென்றனர்.
கதிர்வேல், தானிஷ்குமார், தன்யாஸ்ரீ, சர்வேஸ்வரன், தேசபிரியன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். சுபாஸ்ரீ, மாலினி, ஹர்ஷிகா, ஷாலினி, சுபாஷ், ரித்திக் ரோஷன், சக்திவேல், நவீன்ராஜ், ஜெகதீஷ், தினேஷ், யோஹித், அமிழ்தன், மிருதிளஸ்ரீனி, நிஷாந்த் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். கருணேஷ், ரக் ஷான், ஸ்ரீதர், ஹரிவர்தன், அல்ஷிபா, அனுஸ்ரீ, கீர்த்தி, தர்ஷனா, யோகேஸ்வரி, அர்ச்சுனன் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். முதல்வர் மாலதி, பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.

