/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில சிலம்பம்: மதுரை வீரர்கள் வெற்றி
/
மாநில சிலம்பம்: மதுரை வீரர்கள் வெற்றி
ADDED : ஆக 20, 2025 01:41 AM

திருப்பரங்குன்றம்; தேவகோட்டையில் நடந்த மாநில சிலம்பப் போட்டியில் மதுரை கே.கே. ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.
4 வயது பிரிவில் கணபதி ஆத்விக் 3ம் இடம், 6 வயது பிரிவில் மீரா விக்னேஷ் முதலிடம், 7 வயது பிரிவில் தமிழினி முதலிடம், சபீர் அஹமத், கிஷாந்த் 2ம் இடம், ஜாபியா, சாய்சரண் 3ம் இடம் வென்றனர்.
8 வயது பிரிவில் கவின்பாண்டி, வைஷ்ணவி, தக்சித் முதலிடம், ஜசிரா 2ம் இடம், கவின் பாலாஜி 3ம் இடம், 9 வயது பிரிவில் யோகஸ்ரீ 2ம் இடம், சாரிக்காஸ்ரீ 3ம் இடம், 10 வயது பிரிவில் தன்யா, ரசிகாஸ்ரீ, மேத்யூசாமுவேல், தஸ்வின் முதலிடம், தீபிகா 2ம் இடம், 11 வயது பிரிவில் ரிஷிகுமார், விமல் ராஜ் 3ம் இடம், 12 வயது பிரிவில் சஞ்சனாஸ்ரீ, நிவர்த்தன், பிரவீன், சூர்யா முதலிடம், யாழினிதேவி 3ம் இடம், 13 வயது பிரிவில் ஜாபர், சசிதா 3ம் இடம் இடம் வென்றனர். ஜான் வின்சென்ட் பரிசு வழங்கினார்.
பதக்கங்கள் வென்ற வீரர்களை கே.கே. உலக சிலம்ப கூட்டமைப்பு நிர்வாக தலைவர் கார்த்திக், பயிற்சியாளர்கள் முனீஸ்வரன், வனிதா பாராட்டினர்.