தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநில டேக்வாண்டோ போட்டி

மாநில டேக்வாண்டோ போட்டி

மாநில டேக்வாண்டோ போட்டி


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சென்னையில் தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் மாநில டேக்வாண்டோ போட்டி நடந்தது.

பூம்சே, க்யூருகி, விர்ச்சுவல் டேக்வாண்டோ பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் மதுரை மாணவர்கள் கலந்து கொண்டு 6 தங்கம் , 3 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களை வென்றனர். சப் ஜூனியர் பிரிவில் ஆஷிகா, குரு பிரணவ், ரித்திக் மகாராஜன், தனுஷ் தங்கம் வென்றனர். குகன் ராஜ், எவி ராஜூ, ஹர்ஷித், ஸ்ரீராம், மகிழ மித்ரா, ரியா வெண்கல பதக்கம் வென்றனர். கேடட் பிரிவில் அகில் குமார், ஹர்ஷினி ஸ்ரீ தங்கமும், ஸ்னிக்தவர்ணா வெள்ளியும், அக்சரா வெண்கலமும் வென்றனர். ஜூனியர் பிரிவில் சிபிராஜ் வெண்கல பதக்கம் வென்றார். விர்ச்சுவல் டேக்வாண்டோவில் ஈஷா வெள்ளியும், சம்யுக்தா வெண்கலமும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை டேக்வாண்டோ அசோசியேஷன் மாநில செயலாளர் சித்தேஸ்வரன், தலைவர் சாக்ரடீஸ், பயிற்சியாளர்கள் வெங்கடேசன், உதயகுமார், அமெச்சூர் மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளர் நாராயணன், பயிற்சியாளர்கள் பிரகாஷ் குமார், விஜய் அருணாச்சலம், நவீன், புவனேஸ்வரி, மருதீஸ்வரன் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us