ADDED : ஆக 08, 2025 02:51 AM
மதுரை: மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான முத்தையா அம்பலம் நினைவு வாலிபால் போட்டி மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் நடக்கிறது.
நாக் அவுட் சுற்று முதல் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 2-0 புள்ளிகளில் கோவை கே.பி.ஆர்., கல்லுாரியை வீழ்த்தியது. சென்னை ஜேப்பியார் கல்லுாரி 2-0 புள்ளிகளில் திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியை வீழ்த்தியது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை 2-0 புள்ளிகளில் கோவை ரத்தினம் கல்லுாரியை வீழ்த்தியது.
சிவகாசி 'அஞ்சா' கல்லுாரி 2-1 புள்ளிகளில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியை வீழ்த்தியது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி 2-0 புள்ளிகளில் திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலையை வீழ்த்தியது. பொள்ளாச்சி எஸ்.டி. கல்லுாரி 2-0 புள்ளிகளில் வக்போர்டு கல்லுாரியை வீழ்த்தியது. கோவை கற்பகம் பல்கலை 2-0 புள்ளிகளில் யாதவர் கல்லுாரியை வீழ்த்தியது.
காலிறுதிப் போட்டி முதல் காலிறுதியில் எஸ்.ஆர்.எம். பல்கலை 2-0 புள்ளிகளில் பிஷப் ஹீபர் கல்லுாரியை வீழ்த்தியது. 2வது காலிறுதியில் சென்னை லயோலா கல்லுாரி 2-0 புள்ளிகளில் சிவகாசி அஞ்சா கல்லுாரியை வீழ்த்தியது.
3வது காலிறுதியில் அமெரிக்கன் கல்லுாரி 2-0 புள்ளிகளில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியை வீழ்த்தியது. 4வது காலிறுதியில் ஜேப்பியார் கல்லுாரி 2-1 புள்ளிகளில் கற்பகம் பல்கலையை வீழ்த்தியது. இன்று (ஆக.8) அரையிறுதி, இறுதிப்போட்டி நடக்கிறது.