ADDED : அக் 26, 2024 05:32 AM

மதுரை: மதுரையில் தி சாய் பாரம்பரிய கலை மையம் சார்பில் மாநில யோகா போட்டி, மதுரை கல்லுாரியில் மாநில சிலம்ப போட்டி நடந்தது. இதில் மதுரை கே.எம்.ஆர்., சர்வதேச பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
யோகா போட்டியில் மாணவர்கள் சீமான் சாரதி, இர்பான் ஷரிப், தக் ஷன், கவிதன், சாய் சஞ்சித், ரியான் முதல் பரிசு பெற்றனர். ஸ்ரீ பால கார்த்தியாயினி, ஹரிஹரன், சாய் ரஞ்சித், சுஜய், கீர்த்தனா, ரக்சன், அனன்யன், தன்வந்த், யுகன், ரிழா, வைர பிரவீன் இரண்டாம் பரிசு பெற்றனர். சஞ்சய் நாகராஜன், பிரணவ் ராஜ், ஸ்ரீ சரண், தயாளன், மதுஸ்ரீ மூன்றாம் பரிசு பெற்றனர்.
சிலம்ப போட்டியில் பிரணவ், பிரணவ் நித்தின், லக்ஷ்மி ஸ்ரீ, தன்விகா, சிவகீர்த்தனா, பிரசன்னா, கவின்ஸ் கார்த்திக், அக் ஷயா முதல் பரிசு பெற்றனர். நகுல் பாண்டியன், ஜெரின் ஜோவிதா, ஜெய்ஷ்னா, தனுஸ்ரீ, கபிலேஸ்வரன், பிரகதீஸ்வரி இரண்டாம் பரிசு பெற்றனர். நிஷ்வந்த், கீர்த்திகா, அஜய் கிருஷ்ணா, மஹிமா, குருதேவ் மூன்றாம் பரிசு பெற்றனர். தாளாளர் கிருஷ்ணவேணி, முதல்வர் விஜயா, சரஸ்வதி, உடற்கல்வி ஆசிரியர்கள் சின்னசாமி, லிவிங்ஸ்டன், தலைமை பயிற்சியாளர் ராஜா, பயிற்சியாளர் சாந்தவேல் பாராட்டினர்.