/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து மலையில் ஆடுவெட்ட அனுமதி; கலெக்டரிடம் எஸ்.டி.பி.ஐ., வலியுறுத்தல்

ADDED : ஜன 01, 2025 05:49 AM
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில் கடந்த டிச.25 ல் ராஜபாளையம் மல்லடிபட்டி சையது அபுதாகிர் 53, என்பவர் குடும்பத்துடன் கந்துாரி கொடுக்க வந்தார்.
ஆட்டுக்கிடாவுடன் வந்த அவரிடம், மலைமீது ஆடு வெட்ட அனுமதியில்லை என போலீசார் திருப்பி அனுப்பினர்.
பள்ளிவாசலில் இருந்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். சிவன்கோயில் படிக்கட்டு அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
இந்நிலையில் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில் சமைக்கவும், ஆடு வெட்டவும் போதிய வசதிகள் இருப்பதாகவும், கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி எஸ்.டி.பி.ஐ.,கட்சி சார்பில் மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் நேற்று மனு அளித்தனர்.
பின்னர் பள்ளிவாசல் செயலாளர் ஆரீப் கூறுகையில், கந்துாரி கொடுக்க அனுமதியில்லை என போலீசார் தடுத்தனர்.
அனுமதி இல்லை என முறையான ஆவணங்களை போலீசார் காண்பிக்கவில்லை. ஏற்கனவே இருந்த நடைமுறையை தொடர அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு வழங்கியுள்ளோம். பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார், என்றார்.