ADDED : அக் 15, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அருகே சின்ன பொக்கம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி 40. விவசாயியான இவர் ஆடுகளும் வளர்த்து வருகிறார். விவசாய நிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்கும் வேலையும் செய்து வந்தார்.
காங்கேயநத்தம் விலக்கு அருகே முத்துப்பாண்டி தோட்டத்தில் சில நாட்களாக கிடை அமைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்ததால் ஆடுகளை தோட்டத்திலேயே விட்டு விட்டு அருகில் இருந்த செட்டில் துாங்கினார். நேற்று காலை பார்த்த போது கிடையில் இருந்த 13 ஆடுகள் காணாமல் போனது தெரிந்தது. சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.