/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருடுபோன மீனாட்சி அம்மன் சிலை; 20 ஆண்டுகளாக போட்டோதான் மூலவர் மதுரையில் இப்படியும் ஒரு பரிதாப கோயில்

ADDED : மார் 01, 2024 06:36 AM

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சவுடார்பட்டியில் ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் மூலவர் சிலை திருடப்பட்டதோடு கோயிலும் பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளது.
இக்கோயிலில் விநாயகர், குரு பகவான், முருகர் என தனித்தனி சன்னதிகள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு பின் மீனாட்சி அம்மன் கற்சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுவரை சிலை மீட்கப்படவில்லை. கோயிலும் உரிய பராமரிப்பின்றி பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது.
சுற்றுப் பிரகாரத்தில் உள்ள மற்ற சன்னதிகளின் கதவுகள் உள்ளிட்டவை இல்லாத நிலையில் அங்கிருந்த சிலைகளை கிராம மக்கள் தங்கள் பொறுப்பில் பாதுகாத்து வருகின்றனர். தற்போது மீனாட்சி அம்மன் சிலை இருந்த இடத்தில் போட்டோவை வைத்து வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
இக்கோயில் பராமரிப்புக்கு என இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பல ஏக்கருக்கும் மேல் நிலத்தை தானமாக வழங்கி உள்ளனர். பெரும்பாலானவை குத்தகைதாரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோயில் பராமரிப்புக்கு என நிதி ஒதுக்குவதாக கூறிவிட்டு இதுவரை அதிகாரிகள் ஒதுக்கவில்லை என மக்கள் புலம்புகின்றனர். இதனால் கோயில் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை புனரமைத்து மீண்டும் மக்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கிராம மக்களிடமே கோயிலை ஒப்படைக்க வேண்டும்.