ADDED : நவ 21, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலைஞர் நுாலகத்தில் தெருநாய்க்கடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தகவல் அலுவலர் சரிதா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினரான சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியர் டாக்டர் திருநாவுக்கரசர் தர்மலிங்கம் நாய்க்கடியால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கினார். அல்அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் நபி, நுாலகர்கள் புகழ்வேந்தன், மாதவன் பங்கேற்றனர்.

