/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண்களை பாதிக்கும் மனஅழுத்தம்; , ரத்தசோகை வாய்ப்புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புள்ளது
/
பெண்களை பாதிக்கும் மனஅழுத்தம்; , ரத்தசோகை வாய்ப்புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புள்ளது
பெண்களை பாதிக்கும் மனஅழுத்தம்; , ரத்தசோகை வாய்ப்புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புள்ளது
பெண்களை பாதிக்கும் மனஅழுத்தம்; , ரத்தசோகை வாய்ப்புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புள்ளது
ADDED : நவ 20, 2025 06:14 AM
மதுரை: ''பெண்களுக்கான வாய்ப்புற்றுநோய் வருவதற்கு அதிக மனஅழுத்தம், ரத்தசோகை ஆகியவையும் காரணங்களாக உள்ளன,'' என மதுரை அரசு மருத்துவமனை பல் மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர் அனிதா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
வாய்ப்புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களில் பெண்கள் 30 சதவீதம் பேர். கிராமப்புறங்களில் தற்போதும் புகையிலையை வாயில் தேக்கி வைக்கும் பெண்கள் உள்ளனர். புகையிலைச் சாற்றை உறிஞ்சும் போது அவர்களுக்கு மனக்கிளர்ச்சி (மூட் எலிவேட்டர்) ஏற்படுவதாக நினைத்துக் கொள்கின்றனர். பல ஆண்டுகளாக இப்படிச் செய்யும் போது வாய் உட்பகுதியில் ஆறாத புண் ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் கட்டியாக மாறலாம். அதேபோல உட்பகுதியில் கூர்மையான பற்கள் இருந்தால் சதைப்பகுதியில் தொடர்ந்து காயம் ஏற்பட்டு புண்ணாகி புற்றாக மாறலாம்.
மனஅழுத்தமா அதிக மனஅழுத்தம் காரணமாக சில பெண்களுக்கு வாய்ப்புண் ஏற்படும். பரீட்சை நேரங்களில், வெளியில் செல்லும் போது ஒருசிலருக்கு மனப்பதட்டம் ஏற்படும். மாதவிடாயின் போதும் மன அழுத்தத்தால் வாயில் புண் ஏற்படும்.
ஆனால் தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் புண் ஆறாத நிலையில் இருந்தால் அதை கவனிக்க வேண்டும். கூடவே ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் இருந்தால் உடனடியாக பல் டாக்டரின் ஆலோசனை பெறுவதே நல்லது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும் போது உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் முழுவதுமாக கிடைக்காது. ரத்தசோகை உள்ள பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
வாயில் புண் இருந்தால் ஆறுவதற்கான வாய்ப்பும் குறையும்.
எனவே வாய்ப்புற்று வருவதற்கு ரத்தசோகையும் மனஅழுத்தமும் காரணமாக இருக்கலாம். எனவே பெண்கள் மனஅழுத்தத்தை குறைத்து, ரத்தசோகை இல்லாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

