/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யூ., அறிவிப்பு
/
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யூ., அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யூ., அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யூ., அறிவிப்பு
ADDED : ஜன 10, 2024 06:48 AM
மதுரை, : ''மத்திய அரசு 2004 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தையும், அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் வழங்கியுள்ளது; இருவரும் அதே வேலையைத்தான் செய்கிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற போராட்டம் தொடர்வோம்,'' என, மதுரையில் எஸ்.ஆர்.எம்.யூ., பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.
எஸ்.ஆர்.எம்.யூ.,- ஏ.ஐ.ஆர்.எப்., தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக நேற்று ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் உண்ணவிரதத்தில் ஈடுபட்டனர். நாளை (ஜன. 11) வரை இப்போராட்டம் நடக்கிறது.
இதில் கலந்து கொண்ட கண்ணையா கூறியதாவது: 2004க்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தோம். மத்திய அரசு நிறைவேற்றாத நிலையில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசின் அனைத்துத்துறை சார்பிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம். இதில் 90 சதவீத ஆதரவு பெற்றோம். பொதுமக்களின் நலன் கருதி முதற் கட்டமாக 4 நாள் உண்ணாவிரதம் நடத்துகிறோம்.
எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையின் படி, சிறப்பு கமிட்டி அமைத்துள்ளோம். இதன் மூலம் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். இதில் சுமூக முடிவு கிடைக்காத நிலையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து பிப்ரவரியில் கூடி முடிவெடுக்கப்படும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நிதி இல்லை என காரணம் கூறுவது ஏற்கதக்கது அல்ல. இது போன்று தான் 6 ஆவது ஊதியக்குழு அமைக்க முடியாது என நிதி நிலையை காரணமாக கூறினர். ஆனால் தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார். எஸ்.ஆர்.எம்.யூ., கோட்ட செயலர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

